உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு! கண்டி மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவி

Report Print Jeslin Jeslin in கல்வி

தற்போது வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், கம்பொளை ஷாஹிரா வித்தியாலயத்தைச் சேர்ந்த அஷ்மா என்ற மாணவி கண்டி மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

குறித்த மாணவி உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மூன்று ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 03 இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் 167,907 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 19 பேரின் பெறுபேறுகள் வெளியீடு தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Latest Offers