உயர் தரத்தில் மட்டக்களப்பு, மாத்தளை மாணவர்கள் படைத்த சாதனை!

Report Print S.P. Thas S.P. Thas in கல்வி

வெளியாகியுள்ள உயர தரப்பரீட்சைப் பெறுபேறுகளில் மாணவர்கள் சாதனைகளை படைத்துள்ளனர்.

இவ்வாண்டு நடந்த கல்வித் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகியிருந்தது.

வெளியான பெறுபேறுகளின்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் பளை மத்திய கல்லூரி மாணவி க.அபிசிகா( முரசு மோட்டை ) முதல் இடத்தையும், வணிகப்பிரிவில் முருகானந்தா கல்லூரி மாணவி ஜனனி, கணிதப் பிரிவில் புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி ஜெ.மகிழினி முதல் இடத்தினையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில் மாத்தளை ஷாஹீரா கல்லூரி மாணவர் முகமத் ரிஷ்மி முகமத் ஹக்கீம் ஹரீம் மூன்று ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தினையும் உயிரியல் பிரிவில் பெற்று சாதித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு ஏறாவூர அலிகார் தேசியப் பாடசாலை மாணவி முகமத் ஹிதியத்துல்லா பாத்திமா சுக்ரா மாவட்ட மூன்று ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் பத்தாவது இடத்தினையும் பெற்று சாதித்துள்ளார்.

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 03 இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் 167,907 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். 119 பேரின் பெறுபேறுகள் வெளியீடு தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.