வவுனியாவில் வசதியற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Report Print Theesan in கல்வி

வவுனியா - ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியிலுள்ள வசதியற்ற 20 மாணவர்களுக்கு வங்கியில் பணம் வைப்பிலிடப்பட்டு வங்கிப்புத்தகம் மற்றும் 36 வசதியற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பொது நோக்கு மண்டபத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் அப்பகுதியிலுள்ள வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் பிரதான பிஷப் பி. எம். இராஜசிங்கத்தினால் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அஞ்சலா உதவும் கரத்தினூடாக பிரான்ஸ் நாட்டில் புலம் பெயர்ந்து வசித்து வரும் தாயக உறவின் நிதிப்பங்களிப்புடன் 20 பாடசாலை செல்லும் வசதியற்ற மாணவர்களுக்கு வங்கியில் பண வைப்பு செய்யப்பட்டு வங்கிப் புத்தகம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சரும், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ப. சத்தியலிங்கம், முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் து. நடராஜசிங்கம் (ரவி), ஈஷி மிஷன் ஆலயத்தின் பிஷப் பி. எம். இராஜசிங்கம், தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அஞ்சலா கோகிலகுமார், தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்டப் பொறுப்பாளர் குறூஸ், உதவி மாவட்டப் பொறுப்பாளர் ராஜன், மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கம், மாதர் அபிவிருத்திச்சங்கம், பொதுமக்கள் எனப்பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers