சகல பாடசாலை அதிபர்களுக்கும் கல்வியமைச்சு சுற்றுநிரூபம்

Report Print V.T.Sahadevarajah in கல்வி
152Shares

அரச பாடசாலைகளில் 2019இல் தரம் ஒன்று மாணவர்களுக்காக முறையான வகுப்புகளை ஆரம்பிக்கும் நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி நடத்த கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சுற்றுநிரூபத்தை கல்வியமைச்சு சகல மாகாண கல்விச் செயலாளர்கள், பணிப்பாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளது.

முறையாக வகுப்புகளை ஆரம்பிக்கும் போது இருவேறு நிகழ்ச்சிகளை கட்டாயம் நடாத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய சிறார்கள் பெற்றோர்கள் மற்றும் அதிதிகளை வரவேற்கும் நிகழ்வை நடத்துதல், அதன்போது தேசிய மற்றும் பாடசாலைக் கொடிகளை ஏற்றல், தேசியகீதம் மற்றும் பாடசாலை கீதம் என்பனவற்றை இசைத்தல்.

இரண்டாவது புதிய மாணவர்களை வரவேற்பதற்காக ஆரம்பக் கல்விப்பிரிவு மாணவர்களின் பொருத்தமான கலைநிகழ்சி ஒன்றையும் நடத்துதல்.

புதிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய இந்நிகழ்வில் பெற்றோருக்கு முதலாந்தர கலைத்திட்டம் தொடர்பில் அறிவூட்டம் செய்யப்பட வேண்டும்.

எனவே 17ஆம் திகதிக்கு முன்பதாக புதிய பிள்ளைகளை இனங்காணும் வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த சுற்றுநிருபத்தில் கேட்கப்பட்டுள்ளது.