வவுனியா வடக்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் நிறுத்தப்பட்டது!

Report Print Thileepan Thileepan in கல்வி
60Shares

வவுனியா தெற்கு வலயத்தின் செட்டிகுளம் கோட்டத்தில் இருந்து வவுனியா வடக்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட 22 ஆசிரியர்களில் 7 ஆசிரியர்களின் இடமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு யூலைமாதம் செட்டிகுளம் கோட்டத்திற்கு நியமனம் பெற்றிருந்த 22 ஆசிரியர்களிற்கு இம்மாதம் 1 ம் திகதியிலிருந்து வவுனியா வடக்கு வலயத்திற்கு இடமாற்றம் வழங்கபட்டுள்ளது. இதனால் பின்தங்கிய பகுதியான செட்டிகுளம் பகுதியில் ஆசிரியர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பத்துவருடங்கள் பணியாற்ற வேண்டும் என்று நியமனம் வழங்கபட்டபோதும் தற்போது மிகவிரைவாக இடமாற்றம் வழங்கபட்டுள்ளமை தொடர்பில் இன்று கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இடமாற்றங்கள் தொடர்பாக மாகாணகல்வி பணிப்பாளரால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே இடமாற்றம் செயற்பாடுகள் வகுக்கப்பட்டது. அந்தவகையில் செட்டிகுளம் பகுதியில் இடமாற்றம் வழங்குவதாக தீர்மானித்த 22 ஆசிரியர்களில் 9 ஆசிரியர்களின் இடமாற்றம் இடைநிறுத்தபடவுள்ளது.

செட்டிக்குளம் கோட்டத்திற்கு உட்பட்ட சில பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் காரணமாக அந்த 9 ஆசிரியர்களின் இடமாற்றம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

ஏனையவர்கள் இம்மாதம் முதலாம் திகதி முதல் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர். அவர்களது இடத்திற்கு வவுனியா நகரகோட்டத்தில் 7 வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.