வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இடம்பெற்ற கால்கோள் விழா

Report Print Thileepan Thileepan in கல்வி

வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிக்கும் கால்கோல் விழா சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் இன்று இடம்பெற்றது.

இதன்போது தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவர்கள் புதிதாக அனுமதி பெற்று வரும் தரம் 1 மாணவர்களை மாலை அனுபவித்து பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.இராதாகிஸ்ணன் மற்றும் மக்கள் வங்கி மற்றும் இலங்கை தேசிய சேமிப்பு வங்கி வவுனியா முகாமையாளர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வீ.ஸ்ரீதரன், பழைய மாணவர் சங்க செயலாளர் எஸ்.காண்டீபன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.