மாந்தைகிழக்கு - பாண்டியன் குளம் ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா

Report Print Yathu in கல்வி

முல்லைத்தீவு - மாந்தைகிழக்கு, பாண்டியன் குளம் ஆரம்ப பாடசாலையில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாண்டியன் குளம் ஆரம்ப பாடசாலையில் இன்று பகல் இடம்பெற்றிருந்தது.

பாடசாலை அதிபர் மானிக்கம் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் தரம் ஒன்று சிறுவர்கள் பாண்டியன் குளம் அம்பாள் ஆலயத்திலிருந்து பான்ட்வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...