கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் எவ். சீ. ராகல் நியமனம்!

Report Print Murali Murali in கல்வி

கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எவ். சீ. ராகல் நியமனமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியற்றுறைப் பேராசிரியர் எவ். சீ. ராகல் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களிடையே நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் முடிவில் பேராசிரியர் எவ். சீ. ராகல் முதலிடம் பெற்றதையடுத்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் முதலாம் திகதி இடம்பெற்றிருந்தது. பேரவையின் பரிந்துரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகங்கள் சட்டத்துக்கமைவாக பேரவையினால் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எவ். சீ. ராகல் நியமனமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.