போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதே வளமான நாட்டிற்கு உகந்ததாகும்

Report Print V.T.Sahadevarajah in கல்வி

போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதே வளமான நாட்டிற்கு உகந்ததாகும் என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.

அரச பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வாரம் தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களை வீதிக்கு இறக்காமல் வீதி ஊர்வலங்களை நடத்தாமல் பாடசாலைக்குள்ளேயே இப்போதைப்பொருள் தடுப்பு வாரத்தை அதிபர்கள் அனுஸ்டிக்க வேண்டும்.

கிழக்கிலுள்ள 17 கல்வி வலயங்களிலும் இவ்வாரத்தை அனுஸ்டிக்க சகல ஏற்பாடுகளையும் எமது வலயங்கள் செய்துள்ளன. அவை இன்றிலிருந்து ஆரம்பிக்கப்ட்டுள்ளன.

அவை முறையாக நடைபெறுகின்றதா என்பதை வலயக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.