புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு

Report Print Mubarak in கல்வி

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் உட்கட்டமைப்பு வேலைகளின் அபிவிருத்திக்காக இந்திய தூதரகத்தினால் 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று உயர் கல்வி அமைச்சில் நடைபெற்றது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில், இந்திய உயர்ஸ்தானிகர் ட்ரன்ஜித் சிங் சந்து மற்றும் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன ஆகியோர் இந்த இருதரப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இதன்போது சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜயசங்கரும் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...