பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளரின் முன்மாதிரியான செயற்பாடு

Report Print Arivakam in கல்வி

பளை இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை தனது சொந்த பணத்தில் புனரமைப்பு செய்து வழங்கியுள்ளார் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன்.

குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

பாடசாலை சமூகத்தின் தொடர்ச்சியான வேண்டுகோளிற்கு இணங்க தவிசாளரினால் குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானம் 25 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

குறித்த புனரமைப்பு பணிகளில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் மற்றும் பாடசாலை அதிபர் ,பெற்றோர் , ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.