காத்தான்குடியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

Report Print Navoj in கல்வி

ஜனாதிபதியின் போதைத்தடுப்பு செயலணியின் வழிகாட்டலில் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஜனவரி 21ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

போதைக்கெதிரான பாடசாலையின் பலமிக்க ஆதரவு எனும் தொனிப்பொருளில் கல்வியமைச்சின் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு - காத்தான்குடி மத்திய கல்லூரியின் ஏற்பாட்டில் பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணி பாடசாலையின் அதிபர் எச்.எஸ்.பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்றுள்ள நிலையில் இதில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாணவர்களின் பேரணி பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகி காத்தான்குடி கடற்கரை வீதி, டீன் வீதி, பிரதான வீதி வழியாக, காத்தான்குடி நகரசபைக்கு சென்று அங்கிருந்து மீண்டும் பிரதான வீதி, காத்தான்குடி கடற்கரை வீதி வழியாக பாடசாலையை வந்தடைந்துள்ளது.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வோரை தடுக்க கோரி காத்தான்குடி நகரசபை தவிசாளருக்கு பாடசாலை அதிபரால் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.