போதை ஒழிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களால் விசேட கருத்தமர்வு

Report Print Ashik in கல்வி
41Shares

தேசிய ரீதியில் ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு அது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பங்கு குறித்து மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு கருத்தமர்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மன்னார் பெரியமடு மகாவித்தியாலயதின் அதிபர் குலதீபன் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது பாடசாலை ரீதியில் மாணவர்கள் எவ்வாறு போதை பொருட்கள் பாவனையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்பது தொடர்பாகவும், போதைப் பொருள் பாவனை தொடர்பான குற்ற செயல் ஒன்றினால் பாதிக்கப்படும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக மன்னார் பொது அமைப்புக்களின் அதிகாரி மற்றும் ஊடகவியளாலர்களினால் கருத்துரைகள் வழங்கப்பட்டுள்ளது .

அத்துடன் மாணவர்களுடைய கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ச்சியாக குறித்த போதை பொருள் ஒழிப்பு வாரத்தில் நடைமுறை செயற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகளில் பொலிஸ், உள்ளூர் அரசியல்வாதிகள் ஆகியோரை நேரடியாக அழைத்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.