கொழும்பு இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்லமெய்வல்லுநர் போட்டி

Report Print Sinan in கல்வி

இரத்மலானை - கொழும்பு இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்லமெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் 31ஆம் திகதி பி.ப 1.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டி கல்லூரின் அதிபர் சி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் மத்தியஸ்தரும், இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ் மற்றும் கௌரவ விருந்தினராக பிலியந்தலை கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் P.K.D.U.D.S குணசேகர ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இதன்போது பிலியந்தலை வலய விளையாட்டுப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் H.K.ஜெயசேகர சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

மேலும் இரத்மலானை இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உபதலைவரும், சமாதான நீதவானுமான S.T.S அருளானந்தமும் கலந்து கொள்ளவுள்ளதுடன், குறித்த விளையாட்டு போட்டியில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரை கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers