தேசிய கல்வியற் கல்லூரியில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்

Report Print Theesan in கல்வி

தேசிய கல்வியற் கல்லூரியில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் விண்ணப்பங்கள் கடந்த 25ம் திகதி வெளியான அரச வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

2016 - 2017ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை அனுப்புவதுடன் இம் முறை இணைய வழிமுறை மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள விரும்புவோர்கள் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரிக்கு 03.02.2019 காலை 9 மணிமுதல் முற்பகல் 11 மணி வரை நேரில் சமூகமளித்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி க.சுவர்ணராஜா தெரிவித்துள்ளார்.