மூதூர் - சேனையூர் மத்திய கல்லூரியின் 62ஆவது கல்லூரி தினம்

Report Print Abdulsalam Yaseem in கல்வி

திருகோணமலை - மூதூர் ,சேனையூர் மத்திய கல்லூரியின் 62ஆவது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை நடத்த கல்லூரியின் உயர் தர மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கிணங்க சனிக்கிழமையான நாளை நட்புறவு கிரிக்கட் சுற்றுப்போட்டி கல்லூரி திறந்த வெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் செல்வநாயகம் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை பழைய மாணவர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் நடைபவனி காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகி பல கிராமங்களை ஊடறுத்து இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2006 இறுதி யுத்தத்தில் இக்கல்லூரியின் பாரிய பௌதீக வளங்கள் பெரியளவில் அழிவுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.