நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் 03 மாடி கட்டிடம் திறந்து வைப்பு

Report Print Abdulsalam Yaseem in கல்வி

தனியார் நிறுவனமொன்றின் சுமார் ஏழு கோடி ரூபா நிதி உதவியின் கீழ் நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் 03 மாடி கட்டிடம் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் அதிபர் .எல்.நிசாமுதீன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.எம்.பைசால் காசிம், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்_ஹிஸ்புல்லாஹ் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.லத்தீப், அமெரிக்க மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தின் சிவில் இராணுவ பணிப்பாளர் டெர்ரி.ஏ.ஜோன்சன் , அமெரிக்க மற்றும் மாலைதீவுக்கான தூதரக அரசியல் பிரிவு தலைவர் அந்தோணி.எப்.ரென்சுல்லி , உள்ளூர் அரசியல் வாதிகள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

Latest Offers

loading...