பாடசாலை அதிபர்களுக்கு அனர்த்த பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு

Report Print Navoj in கல்வி

மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு பாடசாலை பாதுகாப்பு திட்டம் தொடர்பான கருத்தரங்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி தலைமையில் வலயக் கல்வி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கல்குடா கல்வி வலயத்திற்குட்ட பாடசாலை அதிபர்கள், கல்குடா கல்வி வலயத்தின் அனர்த்த முகாமைத்துவ பொறுப்பாளர் எஸ்.சிவராசா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட உத்தியோகத்தர் மன்சூர் அஹமட், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எஸ்.ஹசீர் ஆகியோர் வளவார்களாக கலந்து கொண்டு அனர்த்த பாதுகாப்பு தொடர்பான கருத்துக்களை வழங்கியுள்ளனர்.

Latest Offers

loading...