இலங்கையின் பல்கலைக்கழக கிளைகள் வெளிநாட்டில்

Report Print Steephen Steephen in கல்வி

பேராதனை மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களின் கிளைகளை மாலைதீவில் நிறுவ அந்நாட்டு ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக இலங்கையின் பல்கலைக்கழங்களின் கிளைகளை வெளிநாடு ஒன்றில் ஸ்தாபிக்க கிடைத்திருக்கும் சந்தர்ப்பமானது இலங்கையின் கல்வி தரத்தை உயர்த்த கிடைத்த வாய்ப்பு என உயர் கல்வியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டி யஹாலதென்ன முஸ்லிம் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலி, இலங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார். இதன் போது அவருடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மாலைதீவுகளில் உள்ள தனித் தீவு வழங்கப்பட உள்ளது.

இந்த பல்கலைக்கழக கிளைகளில் பயிலும் மாணவர்கள், இரண்டு ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு வந்து தமது பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...