வவுனியா மாவட்ட சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 2019ம் ஆண்டிற்கான வவுனியா மாவட்டத்தின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இடையிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்று வருகிறது.
சம்மேளனத்தின் செயலாளர் பிரபாகரன் யானுஜன் தலைமையில் இப் போட்டிகள் இன்று வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.
தொடர்ந்து வரும் சனி, ஞாயிறு தினங்களில் பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கம் போட்டிகள் நடைபெறவுள்ளன.
குறித்த ஆரம்ப நிகழ்வில், சம்மேளனத்தின் தலைவர் ஹரிஸன் டிலிப் , செயலாளர் பி.யானுஜன், உபதலைவர் ஜெ.விதுர்ஷிகா , உப செயலாளர் சிறி.சரண்யா , நடுவர்களான உ.மேகலா, தி.சேதுர்க்கா, கா.நிதர்ஷா, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.