கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது

Report Print Mubarak in கல்வி

திருகோணமலை - கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 08 ஆம் திகதி முதல் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலை இலங்கையின் 361 ஆவது தேசிய பாடசாலை என்பதும் திருகோணமலை மாவட்டத்தின் 11 ஆவது தேசிய பாடசாலை என்பதும் அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பெண்கள் தேசிய பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் பெண் பிள்ளைகளின் கல்வியின் முன்னேற்றத்திற்கு வழி கோலும் என்பதை தான் திடமாக நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இச்சந்தர்ப்பத்தில் இப்பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers