ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் சுமூக நிலைக்கு வந்துள்ள நிலைமைகள்

Report Print Thirumal Thirumal in கல்வி

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டதுறை அல்லாத இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் புதிய வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பான கூட்டம் இன்று கொழும்பு விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சில் அமைச்சர் இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பாகவும், கடந்த காலங்களில் ஏற்பட்ட சுமூகமற்ற சூழ்நிலை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அமைச்சர் இராதாகிருஷ்ணன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக ஆராய்ந்த பொழுது அங்கு ஏற்பட்டிருந்த நிலைமைகள் தற்போது சுமூகமாக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கான உணவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக சுமூகமான தீர்வு எட்டப்பட்டதுடன் ஒழுக்காற்று குழுவினரின் அறிக்கையும் கிடைக்கப்பெற்றது.

குறித்த விடயங்களில் சம்பந்தப்பட்ட நபர்களை இடமாற்றம் செய்வதா அல்லது வேறு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் தீர்மானிக்கப்படும். அதுவரையில் அவர்களின் தற்காலிக இடமாற்றம் நடைமுறையில் இருக்கும்.

எதிர்வரும் காலங்களில் அங்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடுவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுவில் விரிவுரையாளர்கள், உப பீடாதிபதிகள், மாணவர்கள் அணைவரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு கடந்த காலங்களில் பெருந்தோட்டதுறையை சார்ந்த மாணவர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட்டனர்.

பெருந்தோட்டதுறையில் கணித, விஞ்ஞான பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் குறைவான எண்ணிக்கையினராக இருந்த காரணத்தினால் அந்த துறைக்கான ஆசிரியர்களை உருவாக்குவதில் பின்னடைவு ஏற்பட்டது.

எனவே எதிர்வரும் காலங்களில் இந்திய வம்சாவளி தமிழர்களை உள்வாங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Latest Offers