பொதுப்பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!

Report Print V.T.Sahadevarajah in கல்வி
224Shares

கல்வி அமைச்சின் பரீட்சைகள் திணைக்களத்தினால் இவ்வாண்டு நடாத்தப்படவிருக்கும் பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 04ஆம் திகதியன்று நடைபெறும்.

அதேபோன்று க.பொ.த உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 05.08.2019 ஆம் திகதி தொடக்கம் 31.08.2019 வரை நடைபெறும். க.பொ.த. சாதாரணதரப்பரீட்சை எதிர்வரும் 02.12.2019 ஆம் திகதி தொடக்கம் 12.12.2019 வரை நடைபெறும்.

அதேவேளை கடந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு இந்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெரும்பாலும் 28ஆம் திகதி வியாழக்கிழமை வெளிவரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த டிசெம்பர் 3ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 656641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இவர்களில் 422850 பாடசாலை மாணவர்களும் 233791 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தனர். இப்பரீட்சார்த்திகளுக்காக 4661 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.