யாழில் ஒரே பாடசாலையில் 100 வீதமான மாணவர்கள் சித்தி!!

Report Print Sumi in கல்வி

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் பல மாணவர்கள் சிறந்த சித்திகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

இதன்படி யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் 100 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இவர்களுள் 50 மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர், 32 மாணவர்கள் தமிழ்மொழி மூலமும் 18மாணவர்கள் ஆங்கில மொழிமூலமும் சித்தியடைந்துள்ளனர்.

மேலும் 49 பேர் 8ஏ தரச்சித்தியினையும், 34மாணவர்கள் 7ஏ தரச்சித்தியினையும் 35 மாணவர்கள் 6ஏ தரச்சித்தியினைப் பெற்று பாடசாலைக்கும் குறித்த பகுதிக்கும் பெறுமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.