காரைதீவில் 9 மாணவர்கள் 9ஏ சித்திகள்!

Report Print V.T.Sahadevarajah in கல்வி

நேற்று வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி காரைதீவுக் கோட்டத்தில் 9 மாணவர்கள் 9ஏ சித்திபெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையில் 8 மாணவிகளும், காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவனும் சித்தி பெற்றுள்ளதாக அப்பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையில் லோகநாதன் புவித்திரா, சகாதேவராஜா டிவானுஜா, லோகநாதன் வித்யாஷினி, சிவயோகராஜா லக்க்ஷிகா, இளஞ்செழியன் ரிலக்க்ஷினி, இரவீந்திரன் திஜஸ்வினி, மேகநாதன் நிலுக்சிகா, விஸ்வலிங்கம் டோமிகா ஆகிய எட்டு மாணவிகள் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இது அப்பாடசாலை வரலாற்றில் இந்தச் சித்தி சாதனையாகக் கருதப்படுகிறது. இதற்கு முதல் 5 மாணவிகள் 9ஏ சித்தி பெற்றதே வரலாறு ஆகும்.

எனவே இம்முறை உச்சக்கட்ட சாதனையாக 8 மாணவிகள் சித்தி பெற்றுள்ளதையிட்டு கல்விச் சமூகம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

இதேவேளை காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் மகேந்திரன் குவேந்திரன் என்ற மாணவன் 9ஏ சித்திப் பெற்றுள்ளார்.

காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியில் 8ஏ,1பி என்ற சித்தியை இரு மாணவர்கள் பெற்றுள்ளதாக அதிபர் தி.வித்யாராஜன் தெரிவித்துள்ளார்.