சம்மாந்துறை தேசிய பாடசாலையில் 11 மாணவர்களுக்கு 9ஏ சித்திகள்

Report Print V.T.Sahadevarajah in கல்வி

நேற்று வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி அம்பாறை, சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய கல்லூரியில் 11மாணவர்கள் 9ஏ சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளதாக அதிபர் முத்து இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மொகமட் சல்பியார் அப்னான் நுஹா, மொமட் றபீக் அஸீறா, மொகமட் சஹீட் பாத்திமா சிப்க்கா, வசீர் பாத்திமா ஹனா, மொகமட் முஸம்மில் இன்சிஹாம் அகமட், மொகமட் பசீர் மொகமட் தஸ்னீம், இப்றாலெவ்வை இம்றான் சஸாட் அகமட், அன்வர்அலி பாத்திமா சஹ்ரா, மொகமட் அக்பர் ஜனுல் அஸீபா, அப்துல்சலாம் பாத்திமா ஹம்தா, மொகமட் லாபீர் நுஸ்ரத்நுஹா ஆகிய 11 மாணவர்களே இவ்விதம் 9ஏ சித்தி பெற்றவர்களாவர்.

கடந்த வருடம் 8 மாணவர்கள் 9ஏ சித்திபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.