500இற்கும் மேற்பட்ட பெறுபேறுகள் இடைநிறுத்தம்

Report Print Jeslin Jeslin in கல்வி

கடந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், 1,315 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் அவற்றுள் 738 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுப்பெற்றுள்ளன என திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படியே குறித்த 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.