மட்டக்களப்பில் வரலாற்றையே மாற்றியமைத்த இரு மாணவர்களின் பெறுபேறுகள்

Report Print Rusath in கல்வி

தற்போது வெளியாகியுள்ள 2018ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்று வலய வரலாற்றையே மாற்றியமைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, 9 ஏ சித்திகள் பெறப்படாது, 8ஏ, பீ சித்திகளே அதிக சித்தியாக பெறப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள பெறுபேற்றின் அடிப்படையில், கன்னன்குடா மகா வித்தியாலய மாணவர்கள் இருவர் 9 ஏ சித்திகளைப்பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

கன்னன்குடா மகாவித்தியாலயத்தில் கல்வி பயில்கின்ற, பிரபாகரன் அபிரக்சனா, மோனன்தாஸ் டிலோச்சனா ஆகிய மாணவர்களே இவ்வாறு சாதனைப் டைத்துள்ளனர்.

குறித்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமானது கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில், 2017ஆம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையில் இறுதி வலயமாகவிருந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு 93ஆவது இடத்தினைப் பெற்றிருந்தனர்.

யுத்தக்காலத்திலிருந்து பின்னடைவை அடைந்திருந்த இப்பகுதியில் மாணவர்கள் 2 பேர் 9ஏ சித்தி பெற்றது அம்மக்களை பெரும் பெருமிதத்திற்குள்ளாகியுள்ளது.

கஸ்ட, அதிகஸ்ட பாடசாலைகளை முழுமையாக உள்ளடக்கிய இவ்வலயம், ஆசிரியர்பற்றாக்குறையுடனும், ஏனைய வளப்பற்றாக்குறைகளுடனும் இயங்கிய நிலையிலும்,மாணவர்களின் முயற்சி, ஆசிரியர்களின் கற்பித்தல்நுட்பம், அதிபர்களின்முகாமைத்துவம், ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள்,பிரதிக்கல்விப் பணிப்பாளர்களின் வழிகாட்டல் போன்றவற்றினால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றுள் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியத்தினால் முன்னெடுக்கப்பட்ட பல விசேட செயற்றிட்டங்கள் மூலமாகவே இவ்வாறான சாதனை படைக்கப்பட்டது என பாடசாலையின் மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் அகிலா கணகசூரியம் அவர்களின் ஊக்குவிப்பு, அவரது சேவை என்பனவே இவை அனைத்திற்கும் காரணம் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மட்டக்களப்பின் வரலாற்றிலேயே இம்மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Latest Offers

loading...