ஹைலன்ஸ் கல்லூரி படைத்துள்ள சாதனை! அதிபர் பெருமிதம்

Report Print Thirumal Thirumal in கல்வி

நேற்று இரவு வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி, ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இப்பாடசாலையிலிருந்து இம்முறை பரீட்சைக்கு 195 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் அவற்றுள் 194 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளதுடன் அவர்கள் அனைவரும் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதில் தமிழ் மொழி மூலம் 17 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 02 மாணவர்களும், மொத்தமாக 19 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களான பீ.சாய்பிரசாத், பி.மதுஷ்கர், ஜீ.ஹரின் ஜெசிகா, பி.மிதுலாஷினி, எஸ்.கிருஷிகா, ஏ.மதுர்ஷிதா, கே.பவிஷாந்த், எஸ்.வேந்கர், கே.பூஜிதா, கே.சர்மினா, ஏ.எப்.எஸ்.கேசியா, ஜி.தினுஷன், ஆர்.நிவேதன், எச்.மதுஜா, வீ.அபிஜா, எஸ்.ஸ்ரீயாலினி, கே.சாருகேஷ் ஆகியோரும்,

ஆங்கில மொழி மூலம் தோற்றிய மாணவன் கே.பிரனவ், மாணவி ஆர்.பிரவிஷா உள்ளிட்ட 19 மாணவர்கள் 9 பாடங்களில் 9ஏ சித்திகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இப்பாடசாலையில் 100 சதவீத மாணவர்கள் இம்முறை உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் கல்லூரியின் அதிபர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers

loading...