சாதனை படைத்துள்ள வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்கள்

Report Print Navoj in கல்வி

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்கள் 02 பேர் 9ஏ சித்தியும், 01 மாணவன் 8ஏ,1பீ சித்தியும், 04 மாணவர்கள் 7ஏ,2பீ சித்தியும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஜெயரஞ்சித் அம்றிதா, சந்திரகுமார் மோஜித் ஆகியோர் 9ஏ சித்தியும், கருணாகரன் லோசாந் 8ஏ,1பீ சித்தியும், சற்குணதாசன் தருண், கமலநாதன் அஜினியா, உதயகுமார் தருணிக்கா, உருத்திர மூர்த்தி ருசாந்தினி ஆகியோர் 7ஏ,2பீ சித்தியும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பரீட்சைக்கு 118 மாணவர்கள் தோற்றியதுடன் இதில் 78 மாணவர்கள் கணித பாடத்துடன் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

அத்துடன் 2017ஆம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் உயர் தரத்திற்கு 63 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றிருந்தனர்.

2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018இல் 66.1 வீத அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கல்லூரி முதல்வர் அ.ஜெயஜீவன், சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன் அடைவு மட்டத்தை அதிகரிப்பதில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...