வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் 9 ஏ தர சித்தி

Report Print Navoj in கல்வி

மட்டக்களப்பு - கல்குடா, வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மூன்று மாணவர்கள் 9ஏ சித்தியும், மூன்று மாணவர்கள் 8 ஏ,பீ சித்தியும் பெற்றுள்ளதாக அதிபர் எஸ்.மோகன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 65 வீதமானவர்கள் உயர் தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளனர்.

76 மாணவர்கள் கணிதப்பாடச் சித்தியுடன் உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதுடன், 13 மாணவர்கள் கணித பாட சித்தியின்றி சித்தியடைந்துள்ளனர்.

இச் சித்திகள் கடந்த வருடங்களை விடவும் அதிகமானது என்பதுடன் சிறப்பான பெறுபேறு என்று அதிபர் எஸ்.மோகன் தெரிவித்துள்ளார்.

பாடசாலையின் இந்தச் சிறப்பான கல்வி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, மென்மேலும் அடைவு மட்டம் உயர்வடைவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இப்பாடசாலையிலிருந்து 117 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...