கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ. த. சாதாரணதர பரீட்சையில் 4 பேர் 9ஏ சித்தி

Report Print Thirumal Thirumal in கல்வி
80Shares

க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியானது.

இந்த பரீட்சையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் நான்கு மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் ஆர்.சிவலிங்கம் தெரிவித்தார்.

இப்பாடசாலையிலிருந்து இம்முறை பரீட்சைக்கு 156 மாணவர்கள் தோற்றியுள்ளனர். தோற்றிய 156 மாணவர்களுள், 100 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளதுடன், 100 மாணவர்கள் க.பொ.த உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதில் 4 பேர் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளதோடு, மேலும் 4 மாணவர்கள் 8 ஏ. 1 பீ சித்திகளை பெற்றுள்ளனர்.

அதனடிப்படையில், மாணவர்களான ஜெ.லெய்ஸ், நாகராஜா ஷான், எந்தனி திலுக்ஷி, உலகநாதன் புஷ்பபிரியா ஆகியோர் 9 ஏ சித்திகளையும், திருச்செல்வம் மிதுர்ஷனி, விஜயகுமார் அனுக்ஷனா, நாராயண லிங்கமூர்த்தி சோபிக்கா, நாகராஜா தரணி தினுஷா ஆகியோர் 8 ஏ. 1 பீ சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.