வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9ஏ சித்தி

Report Print Theesan in கல்வி

வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9ஏ சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டிருந்தது.

இதன்படி, ராஜ்குமார் சுலோஜன் 9ஏ , துஷானிக்கா விஜயகுமார் 9ஏ, நிகாருன்யா திருமூர்த்தி 9ஏ , டில்சியா திலீப்குமார் 9ஏ அத்துடன் யாவேஸ்ட்டா ஏழுமலை 8ஏ சி , வத்ஷனா ராஜரட்ணம் 7ஏ 2பி , கலையருவி சுதாகரன் 7ஏ 2பி மற்றும் டினோசிகா ராமர் 7ஏ 2சி ஆகிய மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இதேவேளை, நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இம்முறை பரிட்சைக்கு தோற்றிய 141 மாணவர்களில் 106 மாணவர்கள் கா.பொ.த உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். விகிதாசார அடிப்படையில் 75வீதமான மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

Latest Offers

loading...