கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் 13 மாணவர்கள் 9ஏ சித்தி

Report Print Nesan Nesan in கல்வி

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் இம்முறை 13 மாணவர்கள் ஏ சித்திகளையும், 5 மாணவர்கள் 8 ஏ சித்திகளையும், 5 மாணவர்கள் 7 ஏ சித்திகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியானது.

இந்நிலையில், அதிகமான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளையும் பெற்று கல்லூரிக்கு பெருமை தேடி கொடுத்திருப்பதாக கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தெரிவித்துள்ளார்.

மேலும், இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு உழைத்த அனைத்து ஆசிரியர்களையும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் உறுதுணையாக இருந்து உழைத்த அனைத்து பெற்றோர்களையும் பாராட்டியுள்ளார்.

இனிவரும் காலங்களில் நடைபெறும் பரீட்சை முடிவுகளிலும் பெற்றோர் சமூகம் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...