புனித சவேரியார் பெண்கள் பாடசாலை மாணவிகள் 6 பேர் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சாதனை

Report Print Ashik in கல்வி

கா.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த 6 மாணவிகள் 9 ஏ சித்தியினை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையிலே குறித்த பாடசாலையில் கல்வி கற்ற 6 மணவிகள் 9 ஏ சித்தியை பெற்றுள்ளனர்.

மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவிகளான யஸ்ரின் ஜெனிக்கா சனோலின், இரவீந்திர குமார் சுவேதா, ஜெனிங்ஸ் ஜெனுசா, அமல்ராஜ் இம்மனுவலி, பற்றிக் ஆனந்தகுமார் மெற்றில் பியூலா,சிந்தாத்துரை சஞ்சோனிக்கா ஆகிய 6 மாணவிளே 9 ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் அருட்சகோதரி கில்டா சிங்கராயர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers

loading...