சண்முகா மகாவித்தியாலய மாணவன் சாதனை!

Report Print V.T.Sahadevarajah in கல்வி
100Shares

2018 க.பொ.தராதர சா.தரப்பெறுபேற்றின்படி காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் மகேந்திரன் குவேந்திரன் என்ற மாணவன் 9 ஏ சித்திப்பெற்றுள்ளார் என வித்தியாலய அதிபர் இரா.ரகுபதி தெரிவித்துள்ளார்.

மேலும் பி.லோஜினி என்ற மாணவி 8 ஏ 1 பி சித்திபெற்றுள்ளார். அங்கு 80வீத மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 உ.த. பரீட்சையில் இப்பாடசாலை 100 வீத சித்தியைப்பெற்றிருந்தது. கிழக்கில் சகலபாடங்களிலும் சித்தியடைந்த பாடசாலை இதுவாகும். பல்கலைக்கழகத்திற்கு 10 மாணவர்கள் சென்றுள்ளனர்.

பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களைப் பின்னணியாக கொண்ட பின்தங்கிய பிரதேசத்திலுள்ள சண்முகா மகா வித்தியாலயத்தில் தொடர்ந்து இத்தகைய சாதனையை நிகழ்த்தியிருப்பது குறித்து கல்விச்சமூகம் பாராட்டைத் தெரிவித்துள்ளது.