மாற்றங்களுடன் இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள புதிய திட்டம்! ஜனாதிபதி அறிவிப்பு

Report Print Sujitha Sri in கல்வி

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக மற்றுமொரு பரீட்சையொன்றை நடத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இந்த புதிய திட்டமானது கல்வியலாளர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொடகம சுபாரதி மகா மாத்ய வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்வி முறையானது இலங்கையில் பின்பற்றப்படவுள்ளதாகவும், அதற்கேற்ற வகையிலான மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பதிலாக தரம் ஏழிலோ அல்லது எட்டிலோ பரீட்சை ஒன்றை நடத்த எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களின் திறமைகளின் அடிப்படையில் அவர்களுக்கேற்ற பாட பிரிவுகளுக்கு அவர்களை தயார்படுத்துவதற்கான வழிகாட்டல் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.