வவுனியாவில் பின்தங்கிய கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள்

Report Print Theesan in கல்வி

வவுனியாவில் பின்தங்கிய கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மாலை நேரவகுப்புக்களை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிராம புற பாடசாலைகளின் அதிபர் மற்றும் பெற்றோரின் பங்களிப்புடன் மாணவர்களின் கல்வித்தகமைகளை அதிகரிக்கும் முகமாக இந்த மாலை நேர வகுப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வவுனியா, தாலிக்குளம் அ.த.க. பாடசாலை மற்றும் வவுனியா, கணேசபுரம் விநாயகர் வித்தியாலயம் உட்பட 15 பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான மாலை நேர வகுப்புக்கள் இன்று தொடக்கம் நடத்தப்படவுள்ளன.

இதில் பாடசாலை அதிபர், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...