இன்னும் நான்கு மாதங்களே... கல்வி அமைச்சின் செயற்பாட்டால் அசௌகரியம்

Report Print Ajith Ajith in கல்வி

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்துக்கான உயிரியல் பாடநூல்கள் இன்னும் அச்சிடப்படவில்லை என்று முறையிடப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைகளுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் இந்த நூல்கள் இன்னும் அச்சிடப்படவில்லை என்று ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்கான பாடத்திட்டங்களை ஏற்கனவே கல்வி அமைச்சு, இணையத்தின் ஊடாக அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் அது ஆங்கிலத்தில் மாத்திரமே வெளியாகியுள்ளது.

வழமையாக இது ஆசிரியர்களுக்கே அனுப்பப்படும். எனினும் இந்த முறை இணையத்தில் அதுவும் ஆங்கிலத்தில் மாத்திரம் பிரசுரிக்கப்பட்டுள்ளமை அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...