பிற்போடப்பட்ட கல்வியியல் கல்லூரிகளின் பரீட்சைகள்

Report Print Nivetha in கல்வி

கல்வியியல் கல்லூரிகளின் பரீட்சைகள் நான்கு நாளைய தினம் ஆரம்பமாகவிருந்த நிலையில் அவை தற்போது பிற்போடப்பட்டுள்ளன.

இலங்கையில் இன்று காலை முதல் எட்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் பல்வேறு பகுதிகளில் பதிவாகியிருந்தன.

இந்த நிலையில் நாட்டில் தொடரும் அசாதாரண சூழல் காரணமாக பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, கல்வியியல் கல்லூரிக்கான இறுதிப் பரீட்சை, அதிபர்களுக்கான இரண்டாம் மொழி தேர்ச்சி பரீட்சை, பௌத்த மாணவர்களுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பரீட்சைகள் என்பனவே பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers