பலத்த சோதனைக்கு மத்தியில் மன்னாரில் இன்று பாடசாலைகள் ஆரம்பம்

Report Print Ashik in கல்வி

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து தரம் 06 முதல் உயர் தரம் வரையிலான மாணவர்களுக்கு இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னாரில் பாடசாலைகள் முழுமையாக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் புத்தகப்பை கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பாடசாலைகளுக்குள் மாணவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் பாடசாலைகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், இன்றைய தினம் மன்னாரில் உள்ள பாடசாலைகளுக்கு சென்ற மாணவர்களின் வரவு மிக குறைவடைந்த நிலையில் காணப்படுகிறது.

மன்னாரில் பாடசாலை பகுதிகளில் வாகனங்களை நிறுத்த பொலிஸார் தடை விதித்துள்ளதோடு, மாணவர்களை பெற்றோர் அழைத்து வந்து விடுவதை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.