க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

Report Print Nivetha in கல்வி

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சாத்திகள் அடையாள அட்டையை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பாடசாலை அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 31ஆம் திகதிக்கு முன்னர் ஆள் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டிருந்தது. எனினும் இதுவரை 50 வீதமான மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைப்பதில் காலம் தாமதத்தை ஏற்படுத்துவதால் பரீட்சைகளுக்கு முன் அடையாள அட்டையை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்படும்.

இந்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை விரைவாக அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் கோரியுள்ளது.

Latest Offers