பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!

Report Print Murali Murali in கல்வி

பாதுகாப்பு நிலைமை தொடர்பில் திருப்தி ஏற்படுமாயின் எதிர்வரும் 13ம் திகதிக்கு முன்னர் எந்தவொரு தினத்திலாவது கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உபவேந்தர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இதேவேளை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மற்றும் முகாமைத்துவ கல்வி வணிக பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

முகாமைத்துவ கல்வி மற்றும் வணிக பீட கல்வியை பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கான பரீட்சை அன்றைய தினம் நடத்தப்படும் என்று ஸ்ரீ ஜெயவர்த்தன புர பல்கலைக்கழத்தின் உபவேந்தரும் சிரேஷ்ட பேராசிரியருமான சுனந்த லீனகே தெரிவித்தார்.

இந்நிலையில், விடுதி வசதிகளை கொண்ட மாணவர்கள் விடுதிகள் எதிர்வரும் 13ம் திகதி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.