யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய கற்கைகள் பீடத்திற்கான அங்குரார்ப்பணம்...!

Report Print Suthanthiran Suthanthiran in கல்வி

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்து கற்கைகள் பீடம் இன்று காலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலயத்தில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ். பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி க.கந்தசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினராக இந்திய துணைத் தூதுவர் ச.பாலசந்திரன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக பீடாதிபதிகல், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.