பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை பெற புதிய நடவடிக்கை

Report Print Malar in கல்வி

பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை இணையதளம் அல்லது தபால் அலுவலகத்தின் ஊடாக பெற்று கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேற்படி நடவடிக்கையானது இலங்கை பரீட்சைகள் திணைக்களம் மற்றும் தபால் திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக பரீட்சைகள் திணைக்களம் தபால் திணைக்களத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பான வெளியீடு நாளை மறுதினம் கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.