இலங்கையில் சில பாடசாலைகளுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விடுமுறை

Report Print Sujitha Sri in கல்வி

இலங்கையில் அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பகுதிகளிலுள்ள 11 பாடசாலைகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் தீர்மானத்தை வட மத்திய மாகாண கல்வி திணைக்களம் எடுத்துள்ளது.

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் மேற்படி 11 பாடசாலைகளிலும் அவர்கள் தங்க வைக்கப்படவுள்ளதுடன், இதற்காகவே அந்த பாடசாலைகளை மூட தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.