பரீட்சைகளின் போது அகில இலங்கைத் தரப்படுத்தல்கள் இனி கிடையாது

Report Print Kamel Kamel in கல்வி

பரீட்சைகளின் போது அகில இலங்கைத் தரப்படுத்தல்கள் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கல்வி அமைச்சினால் இந்த விடயம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தனிப்பட்ட ரீதியில் மாணவர்கள் பெற்றுக் கொண்ட அகில இலங்கை நிலைகள் பற்றிய விபரங்கள் இனி வெளியிடப்படாது.