பாடசாலை மாணவர்களுக்கான புதிய திட்டம்! மீண்டும் ஆட்சேபனை வெளியிட்டுள்ள ஜனாதிபதி

Report Print Ajith Ajith in கல்வி

பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் டெப்லெட்களை வழங்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய திட்டத்திற்கு மீண்டும் ஜனாதிபதி தமது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டத்துக்காக 2275 மில்லியன் ரூபாவை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டத்தின் பரீட்சார்த்த மாதிரி பணிகள் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் திட்டத்துக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த திட்டத்தின்கீழ் 189,000 டெப்லெட்களை வழங்க முடியும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.