யாழின் சில பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை

Report Print Sumi in கல்வி

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளதால் வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவுறுத்தலை சகல பாடசாலை அதிபர்களுக்கும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு விடுமுறைக்கான பதில் பாடசாலைகள் சனிக்கிழமை ஒன்றில் தீர்மானித்து நடத்துவதற்கு சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.