இன்று நள்ளிரவுடன் அமுலாகும் தடை! மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

Report Print Sujitha Sri in கல்வி

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான முன்னோடி பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவது இன்று நள்ளிரவுடன் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது.

இதேவேளை, க.பொ.த உயர்தர பரீட்சைக்கான முன்னோடி பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பன இன்று நள்ளிரவிற்கு பின்னர் நடத்தப்படுமாயின் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், க.பொ.த. உயர்தர பரீட்சை எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெற உள்ளதுடன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 4ஆம் திகதியை நடத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.